சென்னை: செப் 27-
இன்னும் 5 முதல் 10 வருடங்களுக்குள் சினிமாவை ஏஐ தொழில்நுட்பம் ஆட்கொள்ளும்.
இசையமைப்பாளர்களே இருக்க மாட்டார்கள் என்றார் யுவன் சங்கர் ராஜா.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் வைத்து பவதாரிணியின் குரலை பயன்படுத்திவிட்டேன்.
இதனால் வரும் காலங்களில் பாடகர்களின் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய வாய்ப்பிருக்கிறது.
இன்னும் 5 முதல் 10 வருஷத்தில் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது.
ஏ.ஐ. தொழில் நுட்பம் அந்த வேலையை முழுமையாக எடுத்துக்கொள்ளும். யாருக்கெல்லாம் இசை தேவைப்படுகிறதோ அவர்கள் ஏ.ஐ. மூலம் இசையை உருவாக்கி பணம் சம்பாதித்து கொள்வார்கள்.
ஆனால் மனிதர்கள் அளவிற்கு உருவாக்க முடியாது. எதிர்காலத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் இறக்குமதி செய்யப்படும்.
அதுதான் சினிமாவையும் ஆட்டிப் படைக்கும். அதே சமயம், மனிதர்கள் தரும் இசையை போல் மனதை தொடும் வகையில் அதனால் தரமுடியாது என ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதும் உண்மை தான் என்று அவர் சொன்னார்.