நியூயார்க்: செப் 27-
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
காசா போர் தற்போது லெபனான் நாட்டிலும் நீண்டுள்ளது.
இஸ்ரேல் கடந்த சில நாட்களான விமானப்படை மூலம் நடத்தி வரும் வான்வெளி தாக்குதலில் இதுவரை லெபனானில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.
பதிலடியாக இஸ்ரேல் முக்கிய நகரங்களை குறிவைத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
நிலைமை இப்போது மோசமான கட்டத்தை எட்டி உள்ளது.
ராய்ட்டர்