பெய்ஜிங், செப் 27-
கடந்த ஜூன் மாதம் புத்ரா ஜெயாவில் முதன் முறையாக நான் சந்தித்த சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் Jin Zhuanglong அவர்களுடன் இன்று கலந்துரையாடலை மீண்டும் தொடர்ந்தாக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார்..
சீனாவிலும் மலேசியாவிலும் 5ஜி நெட்வொர்க் அமலாக்கத்தின் நிலை, எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சில மேம்பாடுகள் அல்லது கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல சிக்கல்களை குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சீனாவில், 5G செயல்படுத்தல் இப்போது 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொகைப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது
மலேசியாவிற்கு குறிப்பாக கிராமப்புறங்களில் இணைப்பை மேம்படுத்தும் முயற்சிகளில் இது ஒரு உதாரணமாக பயன்படுத்தப்படலாம்.
மலேசியாவில் நாம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, தொலைதூரப் பகுதிகள், கிராமப்புறங்கள், தீவுகள் மற்றும் மலைப் பகுதிகளுக்கு “back haul” ஆக fiber நிறுவுவதில் உள்ள பிரச்சனையாகும் என்று அவர் சொன்னார்.
குறுகிய கால பயணம் மேற்கொண்டு சீனாவுக்கு சென்றிருக்கும் அமைச்சர் பாமி பட்சில் இன்று சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் Jin Zhuanglong அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.