கோலாலம்பூர்,செப்.28-
தலைநகரிலுள்ள தமிப்பள்ளிகளின் பாலர்பள்ளி மாணவர்களுக்கிடையிலான கால்பந்து போட்டி தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி திடலில் நடைபெற்றது.
இப்போட்டியில் தம்புசாமி பிள்ளை தமிப்பள்ளி, செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, சிகம்புட் தமிழ்ப்பள்ளி பாலர்ப்பள்ளி மாணவர்கள் பங்குக் கொண்டனர். மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 5 குழுக்கள் இப்போட்டியில் களமிறங்கின.
இளம் வயதிலேயே பிள்ளைகள் விளையாட்டில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் முறையாக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாக தம்புச்சாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளி ஒருங்கிணைப்பாளர் கோமதி தெரிவித்தார்.
மேலும் இப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என்றும் போட்டியில் அதிகமான பள்ளிகளும் பங்கேற்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் கோமதி கூறினார்.