செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் செப் 28-
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நமது சமுகத்திற்கும் நாம் சார்ந்திருக்கும் தொழில் துறைகளுக்கு ஒளிமயமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மைக்கிக்கு உறுப்பினர்கள் வழங்கி வரும் ஆதரவு அளிப்பது.
மைக்கியின் தொடர்ச்சியான முயற்சியால் முடித்திருத்தும் நிலையங்கள், நகைக்கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியது.
இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் மற்றும் தற்போதைய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய தொழில் துறையைச் சேர்ந்த வணிகர்கள் இப்போது எளிதாக கடன் நிதியுதவி பெறுவதற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
இந்த காலகட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக மலேசிய தேசிய வர்த்தக தொழில் துறை சம்மேளனத்தின் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.
இதன் மூலம் மைக்கி ஒரு வரலாற்று பாதையை திறந்துள்ளது.
மலேசிய தேசிய வர்த்தக தொழில் துறை சம்மேளனத்தின் மூலம் மைக்கி தனது உறுப்பினர்களின் நலன்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல உதவும்.
தேசிய பொருளாதார கொள்கைகளில் நமக்கு சாதகமான அம்சங்களை பரிந்துரைக்க முடியும்.
மேலும் தொழில் துறைகளில் அணுக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
மலேசியாவின் வணிக குழுவின் வளர்ச்சிக்கு வளப்பத்திற்கும் பங்களிப்பை வழங்க முடியும் என்று அவர் சொன்னார்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் தொழில் துறைகளில் மேலும் பல சாதனைகளை படைக்க முடியும் என்று மைக்கியின் 73 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் கொள்கை உரையாற்றியபோது டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.