லண்டன், செப். 29-
இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ் புல்லாவுக்கும் இடையிலான மோதலின் காரணமாக தென் லெபனான் மற்றொரு காஸாவாக மாறக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் லெபனானும் மற்றொரு காஸாவாக மாறிக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாட்டு மோதலின் போர்க்களமாக அது உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவையின் 79 ஆவது அமர்வில் ஆற்றிய உரையில் போரெல் கூறினார்.
லெபனானில் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல்-ஈரானிய மோதலை சுட்டிக்காட்டிய போரெல், பரந்த பிராந்தியப் போராட்டத்தில் நாடு போர்க்களமாக மாறி வருவதாகவும் இதனால் லெபனான் சமூகம் மோதலில் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவித்தார்.
இப்பகுதியில் இஸ்ரேல்-ஈரான் மோதல் அதிகரித்து வருவதால் காஸாவின் தலைவிதி லெபனானுக்கும் விரைவில் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ராய்ட்டர்