
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர்: செப் 29-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு நீதிக் கிடைக்கும் வரை மலேசிய மக்கள் சக்தி கட்சி போராடும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சி தோற்றுவித்த நாள் முதல் இன்று வரை டத்தோஸ்ரீ நஜீப்புக்கு நாங்கள் பக்கப் பலமாக இருக்கிறோம்.
குறிப்பாக இக் கட்சியின் தந்தையாகவும் அவர் விளங்கி வருகிறார்.
ஆனால் இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்குகளில் நீதி கிடைக்கவில்லை.
தன்னை பாதுகாத்து கொள்வதற்கான வாய்ப்புகள் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு வழங்கப்படவில்லை.
டத்தோஸ்ரீ நஜீப் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் போராட்டம் என்று மக்கள் சக்தி கட்சியின் பேராளர் மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.