காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் செப் 29-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர்
சங்கத்தின் வளர்ச்சிக்காக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்ய பிரகாஷ் 5 ஆயிரம் வெள்ளி நிதியை வழங்கினார்.
சங்கத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட டாக்டர் சத்ய பிரகாஷ், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ , உலு சிலாங்கூர் கவுன்சிலர் ப. புவனேஸ்வரன் ஆகியோரை சங்கத் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் மாலைகள் அணிவித்து கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட டாக்டர் சத்யா பிரகாஷ், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்பேன் என்று கூறினார்.
சங்கத்தின் துணைத் தலைவர் காளிதாஸ், உதவித் தலைவர்கள் ஜீவா, காளிதாசன், செயலாளர் வெற்றி விக்டர், துணை செயலாளர் குணா, செயலவை உறுப்பினர்கள் வெங்கடேஷ், ஆர்டிஎம் மூர்த்தி, அமுதா, விஜயா, சுந்தர், காளிதாஸ் சுப்ரமணியம், பவளம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.