சிரம்பான்,செப் 30
நாடு முழுவதும் மாநில ரீதியாக ஜசெக கட்சியின் தேர்தல் நடந்து வரும் நிலையில் நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தேர்தலில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பி.குணசேகரன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக நடைபெற்ற மாநிலத் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளை பெற்ற அந்தோணி லோக் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் உதவித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
ஜசெக கட்சியின் இந்தியத் தலைவர்களில் ஒருவரும் நாடு தழுவிய நிலையில் நன்கு அறிமுகமான ஒரு போராட்டவாதியான பி.குணாவின் இந்த நியமனம் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
குறிப்பாக அவர் மாநில ஜசெக துணைத்தலைவராக நியமிக்கப்பட்டதில் நெகிரி செம்பிலான் இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அவரது நீண்டக்கால அரசியல் பயணத்தில் அவர் முன்னெடுத்த சேவைக்கும் மக்கள் பணிக்கும் இந்நியமனம் பெரும் அங்கீகாரம் என போற்றப்படுகிறது.