பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவரது மரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்தது. நஸ்ரல்லா மறைவுக்கு ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. பாலஸ்தீனர்கள் வாழும் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி போர் மூண்டது. இதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.