லண்டன்: செப் 30-
இங்கிலாந்தில் 14 ஆண்டுகள் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்து வந்த நிலையில், ஜூலையில் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்தது.
கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில்,ஆளும் கட்சி பெண் எம்பி ரோசி டப்பீல்டு தொழிலாளர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கெய்ர் ஸ்டார்மரின் கடுமையான,தேவையற்ற கொள்கைகளால் ஏற்பட்ட அதிருப்தியால் தான் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.
ராய்ட்டர்