வாஷிங்டன்: அக் 1-
சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வேதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
கடந்த ஜூன் 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்குப் புறப்பட்டனர்.
அவர்கள் அடுத்த நாளான ஜூன் 6ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர்.
அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது.
விண்வெளி மையத்தில் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வசம் நாசா ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்