ரவாங்கில் இலவசச் சுகாதாரப் பரிசோதனை- பொதுமக்களுக்கு அழைப்பு!

ஷா ஆலம், அக் 1: ரவாங்கில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டம் அக்டோபர் 13 (ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தெராத்தாய் பத்து 17 மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

இதயம், சிறுநீரகம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், கண்கள், காதுகள்
மற்றும் பற்கள் போன்ற சுகாதார பரிசோதனைகளை வழங்கும் இத்திட்டத்தில்
பங்கேற்குமாறு பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

“செலாங்கா செயலியில் பதிவு செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

செலாங்காவில் உள்ள படிவத்தின் மூலம் ஆபத்து காரணிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் பரிசோதனை வழங்கப்படுகிறது,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

”செலங்காவில் பதிவு செய்வது தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் 1800 226 600
என்ற எண்ணில் “Selcare“ஐ தொடர்பு கொள்ளவும்” என்று முகநூலில்
தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் கினி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles