சிரம்பான், அக் 1–
லோரிகள் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுனர்கள் விதிமுறைகள் கடைப்பிடிப்பதையும், போதையில் வாகனம் ஓட்டாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து அமைச்சு ஒருங்கிணைந்த செயல்பாட்டை தொடர்ந்து விரிவுபடுத்தும்.
சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) முன்பு எக்ஸ்பிரஸ் மற்றும் சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள் குறிவைத்து பல சோதனைகளை மேற்கொண்டு. அதில் பல ஓட்டுநர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது என போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
“இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு பிரச்சனை ஆகும்.
நாங்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டைத் தொடங்கினோம். இப்போது நாங்கள் வணிக மற்றும் கனரக வாகனங்களில் கவனம் செலுத்துகிறோம்.
இந்த கனரக வாகனங்களை ஓட்டுபவர்கள் விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய கடுமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
பெர்னாமா