சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் தேதி திரையில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிமான பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லையென லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராமை விட அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு எனத் தகவல் வெளியாகியுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக் கூடிய அதிநவீன அறுவை சிகிச்சை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles