இஸ்தான்புல்: அக் 2-
தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் சோலோகேமி திருமண முறைப்படி, கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டதாக துருக்கியைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் குப்ரா அய்குட் (26) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவரது வீட்டின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து குப்ரா அய்குட் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் கடைசியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த வீடியோவில், ‘நீண்ட நாட்களாக என் உடல் எடையை அதிகரிக்க முயற்சித்து வருகிறேன்.
எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் உடல் எடையை அதிகரிக்க முடியவில்லை. எனது கடுமையான முயற்சிக்கு நேர்மாறாக உடல் எடை குறைந்துகொண்டே வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ எடை இழப்பு ஏற்படுகிறது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் அவசரமாக உடல் எடையை அதிகரிக்க வேண்டும்’ என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
குப்ரா அய்குட் உடலுக்கு அருகில் கிடைத்த ஒரு கடிதத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராய்ட்டர்