புத்ராஜெயா, அக் 2- ஜிஐஎஸ்பி நிறுவனம் நடத்தும் தொண்டு இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் மன நலத்தை சுகாதார அமைச்சு மதிப்பாய்வு செய்து வருகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாங்கள் எதிர்கொண்ட சம்பவங்களால் மனநலப் பிரச்சனைகளைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அமாட் கூறினார்.
“பல விஷயங்கள் இன்னும் விசாரணையில் உள்ளன. இதில் சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கும் சேவையில் ஈடுபடுவோம்.
மேலும் தேசிய மனநல சுகாதார மையம் (NCEMH) மருத்துவ சேவையை வழங்கும் என்று நான் நம்புகிறேன்,” என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பெர்னாமா