கோலாலம்பூர், அக். 2– நாட்டில் ஆக்ககரமான, பயனுள்ள, நியாயமான மற்றும் சமமான வரிவிதிப்பு செயல் முறையை உறுதி செய்வதற்கு இணைய தொடர்புகள் மூலம் வரி செலுத்துவோரின் உரிமைகளும் பாதுகாக்கப் படுவதை உள்நாட்டு வருமான வாரியம் எப்போதும் உறுதி செய்து வருகிறது
வரிவிதிப்பு மீதான அனுகுமுறைகளை வரி செலுத்துவோர் அறிந்துக் கொள்ள அதன் விவரங்களை வருமான வரி வாரியத்தின் இணையத்தளம் வாயிலாக தாங்கள் வெளியிட்டு வருவதாக அந்த வாரியத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு சட்டப் பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி நூர் ஷியாஸ்வானி ஹம்சா கூறினார்.
இது தவிர, வரி செலுத்துவோரின் வரிவிதிப்பு நிலையைப் பற்றிய தகவல்களை வரி செலுத்துவோரின் சமீபத்திய முகவரிக்கு கடிதம் அல்லது அறிவிப்பு மூலமும் வருமான வரி வாரியம் அனுப்புகிறது.
ஆகவேதான் வரி செலுத்துவோர் தங்கள் சமீபத்திய முகவரியை வருமானவரி வாரியத்தின் MyTax அகப்பக்கத்தில் உள்ள இ-அப்டேட் வாயிலாக அல்லது எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோருகிறோம் என்று அவர் கூறினார்
பெர்னாமா