கோலாலம்பூர், அக். 2- மலேசியாவில் காணப்படும் குறைவான சம்பளக்
கட்டமைப்பு முறையே ஊழியர் சேம நிதி வாரியத்தில் (இ.பி.எஃப்.)
உறுப்பினர்களின் சேமிப்பு போதுமான அளவு இல்லாதிருப்பதற்கு காரணம்
என கூறப்படுகிறது.
உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பாக அதிகாரபூர்வமற்ற பொருளாதார
மற்றும் தற்காலிகாக பொருளார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம்
காணப்படும் காணப்படும் சீரற்ற முறையிலான இ.பி.எஃப். பங்களிப்பு இந்த
சிக்கலை இன்னும் மோசாக்கியுள்ளதாக அந்த நிதி வாரியத்தின் தலைவர்
டான்ஸ்ரீ முகமது ஜூக்கில் அலி கூறினார்.
அதிகாரப்பூர்மற்ற தொழில்களின் பால் ஏற்பட்டுள்ள அபரிமித மாற்றம்
காரணமாக இ.பி.எஃப். போன்ற ஓய்வுகால சேமிப்புத் திட்டங்களில்
பங்கேற்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அவர் கூறினார்.
பெர்னாமா