புத்ராஜெயா, அக். 2- நாட்டில் பல்வேறு நிலைகளில் உள்ள பிரச்சனைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது உடனடி கண்காணிப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
வன்முறை சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க பள்ளிகள், அரசியல் அல்லது சில தரப்பினரின் நடவடிக்கைகள் மீது முன்கூட்டியே கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
வன்முறை, பயங்கரவாதம் மற்றும் பயத்தைப் பரப்பும், ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் தரப்பினரின் பிரச்சினையை நான் எழுப்பினேன். க்ஷ
அதை நாம் இப்போது தொடங்கி கண்காணிக்க வேண்டும்.
அது பள்ளிகள், அரசியல், துறை அல்லது சில குழுக்கள் வாயிலாகச் சென்றாலும் சரி. இது கண்காணிக்கப்பட வேண்டும்.
ஏனெனில், முன்கூட்டியே கண்காணிக்கப்படாவிட்டால் உலகின் பல இடங்களில் நிகழ்வதைப் போன்றச் செயல்கள் மூலம் நம்மை அதிர்ச்சியடையச் செய்யும் என்று அவர் தேசிய தீவிரவாதத்தை (MyPCVE) தடுப்பதற்கும் சமாளிப்பதற்கும் மலேசிய செயல் திட்டத்தை தொடக்க விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெர்னாமா