ஜெருசலேம்: அக் 2-
இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியுள்ள ஈரான், 400 ஏவுகணைகளை வீசியுள்ளது.
இதன் காரணமாக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேலை நோக்கி 400 ஏவுகணைகளை ஈரான் ராணுவம் வீசியுள்ளது. டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து வீசப்பட்டுள்ள இந்த ஏவுகணைகளால், அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர்கள் அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
வானில் பறந்து வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து அழிக்கும் பொருட்டு அதிநவீன கருவிகள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது
ராய்ட்டர்