ஈப்போ, அக்.2-
கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியைத் தொடங்கி ஈப்போ ஆசிரியர் பயற்சிக் கல்வி கழகத்தின் தமிழ்ப்பிரிவுத் தலைவராக பொறுப்பேற்று அதன் விரிவுரையாளராக சேவையாற்றிய முனைவர் சேகர் நாராயணன் பணி ஓய்வு பெற்றார்.
கடந்ந மாதம் 6 ஆம் தேதியோடு இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தமிழ்மொழி வளர்ச்சிக்கு சமுகப் பணிக்கு ஆற்றி வந்த சேவைக்கு பாராட்டும் வகையில் சமுக அமைப்புகளும் நண்பர்களும் இணைந்து கௌரவிக்கும் நிகழ்வு ஈப்போவில் உள்ள ஆர்ட்டிஸ் டிக் மண்டபத்தில் நடைபெற்றது.
தமது தொடக்க கல்வியை பாகான் செனா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி 1989 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து தனது ஆசிரியர் பணியை தொடங்கினார்.
தமது கல்வித் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து 1993 ஆம ஆண்டு முதல் 1997 வரை தமது இளங்கலைக் கல்வியை சரித்திரம் மற்றும் தமிழ்மொழியில் முடித்தார்.
பின்னர் 1998 முதல் 2000 வரை தனது முதுகலை படிப்பை முடித்த இவர் அதன் பின்னர் ஈப்போ ஆசிரியர் பயிற்சி கழகத்தில் தமிழ்மொழி விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்ட இவர் 2006 முதல் 2010 வரை முனைவர் படிப்பை முடித்தார்.
இவர் மலேசிய தமிழ் நூல்களில் சமுதாயச் சிந்தனை என்ற தலைப்பில் ஆய்வுகள் செய்து இந்த முனைவர் பட்டத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்ட இவர். மூன்று நூல்களை எழுதியுள்ளார். அத்துடன் ஸ்ரீ லங்கா, சிங்கப்பூர் , தமிழ்நாட்டில் கல்வித் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆசிரியர் தொழிலில் மட்டும் கவனம செலுத்தவில்லை மாறாக சமுதாய பற்றாளர் என்பது குறிப்பிடத்தக்கது