கோலாலம்பூர், அக். 8- நிதியமைச்சில் நேற்று ஆவணங்களில் கையெழுத்திட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இது பொருளாதார கட்டமைப்பை உயர்த்தும் என்பதோடு சமநிலையான விநியோகத்தை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படவுள்ளது.
வரும் அக்டோபர் 18 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது பொருளாதார கட்டமைப்பில் மேலும் மேம்பாடுகள் வெளியிடப்படும் என்று நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.
இது மக்களிடையே விரிவான அளவில் விரைவான பொருளாதார வளர்ச்சியில் மிகவும் சமமான விநியோகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க பங்களித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் மடாணி அரசாங்கம் பணவீக்கத்தை நிவர்த்தி செய்து ஊதியத்தை உயர்த்தும் என்று அண்மையில் சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நிதியமைச்சருமான அன்வார் கூறியிருந்தார்.
பெர்னாமா