கோலாலம்பூர் அக் 9-
நாட்டில் புகழ்பெற்ற லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் சனிக்கிழமை அக்டோபர் 12 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் லெபோ அம்பாங்கில் தீபாவளி கலை விழா விமரிசையாக நடைபெறுகிறது.
சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு தொடங்கும் இந்த கலை விழா இரவு 12.00 மணி வரை நடைபெறும்.
மண்ணின் மைந்தர்கள் என்று வர்ணிக்கப்படும் லோக்காப் இசை கலைஞர்களின் இசை வண்ணத்தில் இம்முறை உள்ளுர் கலைஞர்கள் பாடல்களை பாடி பொதுமகுகளை மகிழ்விப்பார்கள்.
இரவு எட்டு மணிக்கு மேல் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா ஆகியோர் இந்த கலை விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்று லெபோ அம்பாங் இந்தியர் வர்த்தக சங்கத்தின் செயலாளர் இராஜன் தெரிவித்தார்.
இவ்வாண்டும் வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.