ஷா ஆலம், அக்.11– ஶ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு எம்பிஎஸ்ஜே ஶ்ரீ கெம்பாங்கான் மண்டபத்தில் மாலை மணி 6.00 முதல் இரவு மணி 11.00 வரை நடைபெறும்.
இதில் ஶ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர், பெட்டாலிங் மாவட்ட தகவல் துறை அதிகாரி, ஶ்ரீ கெம்பாங்கான் இந்திய சமூக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்வர்.
மேலும், இந்நிகழ்வில் ஶ்ரீ கெம்பாங்கான் இந்திய சமூகத்தின் அதிகாரப்பூர்வ புலனத்தை திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெறும் என அத்தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் திரு குகேனேஸ்வரன் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், வருகையாளருக்கு இலவச உணவு வழங்கப்படும் என்றார்.
அதனை தொடர்ந்து, இந்நிகழ்வில் அதிர்ஷ்ட குழுக்கு நிகழ்வும் இடம்பெறும். அதிர்ஷ்ட குழுக்கு பரிசாக மின்சார பொருட்கள், ஹெம்பர்கள் ஆகியவை வழங்கப்படும்.