இந்திய சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றும் ஆயுதம் கல்வி மட்டுமே! உயர்கல்வியை தொடரும் 200 மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் அரவிந்த் அப்பளசாமி

புத்ரா ஜெயா, அக் 12-
உயிர்க்கல்வியைத் தொடர்வதில் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்கி இருந்த 200 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் இந்திய பிரிவு சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

நிதி நெருக்கடியின் காரணமாக 200 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அர்விந்த் அப்பளசாமி அதிரடியாக களத்தில் இறங்கி உதவி புரிந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

வசதி குறைந்த இந்திய மாணவர்கள் நிதி நெருக்கடியை எதிர் நோக்கிய விவகாரம் இவரின் பார்வைக்கு வந்தபோது அதற்கு தீர்வு காண அவர் உடனடியாக களத்தில் இறங்கினார்.

நமது இந்திய மாணவர்களுக்கு
கல்வி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக 200 மாணவர்களுக்கு உதவி புரிந்த அர்விந்த் அப்பளசாமிக்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த அர்விந்த் அப்பளசாமி பல போராட்டங்களுக்கு மத்தியில் கல்வி கற்று பின்னர் பாங்கி தேசிய பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார்.

இந்திய மாணவர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து இப்போது அவர் உதவிக்கரம் நீட்டியதை இந்திய சமுதாயம் பெரிதும் பாராட்டுக்குரியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles