1,639 டிங்கி சம்பவங்கள் பதிவு – மூவர் உயிரிழப்பு!

புத்ராஜெயா, அக் 12: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரையிலான 40ஆவது தொற்றுநோயியல் வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (1,765) ஒப்பிடும்போது 1,639ஆக குறைந்துள்ளது.

அதே சமயம் மூன்று இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 91,910 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்
இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 105,149ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்
ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

இவ்வாண்டு 95 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 67 இறப்புகள்
மட்டுமே பதிவாகி இருந்தன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles