ஈப்போ, அக். 12-
இங்குள்ள புந்தோங் மகா மாரியப்மன் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூசைகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் சரஸ்வதி பூசையை முன்னிட்டு, துர்க்கை வழிபாட்டு மகளிர் குழுவினர் சரோஜினியின் தலைமையில் சிறந்த ஏற்பாட்டை வழிநடத்தினர்.
இப்பூசையின் சிறப்பு அங்கமாக சிறார்கள் அரிசியில் ஓம் என்று எழுதுவதாகும். இங்கு வருகையளித்த தாயார்கள் தங்கள் சிறார்களை அமர வைத்து, ஆலய குருக்களின் ஆதரவில் சிறப்பாக எழுதினார்கள். அதன் பின் அவர்களுக்கு எழுதுகோல், அழிப்பான் மற்றும் நோட்டுப்புத்தகமும் வழங்கப்பட்டது. அவர்களுடன் மகளிர்களும் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பூசையில் ஆலயத்தலைவர் இரா.சீத்தா இராமன் மற்றும் அவர் தம் செயலவையினர் கலந்துக்கொண்டனர். நிறைவுவிழாவில் பூசையில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.