

செ.வே முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் அக் 12-
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் நாளை
Dewan Tun Abdul Razak, Menara Kembar Bank Rakyat, Kuala Lumpur கோலாலம்பூரில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 வரை மலேசிய இந்தியர் கூட்டுறவு கழக மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இந்த இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு புதிய சரித்திரம் படைக்கும் என்று
துணையமைச்சர் டத்தோஶ்ரீ இரமணனின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் உள்ள 400 க்கும் மேற்பட்ட இந்திய கூட்டுறவு கழகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைப் போன்று ஒவ்வொரு கூட்டுறவுக் கழகமும் வெற்றியை இலக்காக வைத்து செயல்பட வேண்டும்.
இதுவே தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ இரமணனின் குறிக்கோள் என்று அவர் சொன்னார்.
இந்திய கூட்டுறவுக் கழகங்கள் வரும் ஆண்டுகளில் மலேசியாவில் சிறந்த 100 கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றாக பட்டியலிட வேண்டும்.
இதன் இலக்கில் தான் இம்மாநாடு நாளை மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்பட்டது இல்லை.
அதன் அடிப்படையில் இந்த மாநாடு மலேசிய வரலாற்றில் இடம் பிடிப்பதுடன் புதிய சரித்திரத்தையும் படைக்கும் என்று அவர் சொன்னார்.