
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் அக் 13-
இந்திய சமுதாயத்தின் கூட்டரசு கழகங்கள் நலன் கருதி உங்களுக்கு உதவ நான் முன் வருகிறேன்.
என்னோடு இணைந்து கைகோருங்கள். உங்களுக்கு நான் உதவ தயாராக இருக்கிறேன் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் அதிரடியாக அறிவிப்பு செய்தார்.
இந்தியர்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறேன்.
அந்த வகையில் நாட்டில் புதிய இந்தியர் கூட்டுறவு கழகங்கள் அமைக்கவும் நான் உதவ முன் வருகிறேன் என்றார் அவர்.
இன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ரக்யாட் மண்டபத்தில் மலேசிய இந்தியர் கூட்டுறவு கழகத்தின் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.