காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 13-
மலேசிய இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக அரசாங்கம் இதுவரை 13 கோடியே 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 3 கோடி வெள்ளி , அமானா இக்தியார் பெண் திட்டத்தின் வாயிலாக 5 கோடி வெள்ளி , பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 5 கோடி வெள்ளி இதற்கு முன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்போது
புதியதாக ஐ-பேப் மூலம் 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது.
இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் முறையாகவும் பயன்படுத்தவில்லை என்றால் கூடுதல் நிதியை எப்படி கோர முடியும் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் நலன் கருதி இந்திய வணிகர்களுக்கு உதவும் வகையில் பல உதவி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத் திட்டங்களின் வாயிலாக ஒதுக்கப்பட்ட நிதியை இந்திய சமுதாயம் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று மலேசிய இந்தியர் கூட்டுறவு கழக மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.