
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் அக் 13-
இன்று நடைபெற்ற
மலேசிய இந்திய கூட்டுறவுக் கழகங்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து கூட்டுறவுக் கழங்களும் தலா 30,000 வெள்ளி வழங்கப்படும்.
இந்த 30,000 வெள்ளி மானியத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
100 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு இன்று நடைபெறுகிறது.
நாட்டில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன.
இதில் 419க்கும் மேற்ப்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் இந்தியர்களுக்குச் சொந்தமானதாகும்.
இந்தக் கூட்டுறவுக் கழகங்களில் பல வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில் பல கழகங்கள் இயங்காமல் செயலிழந்துள்ளன.
இக் கழகங்களை எல்லாம் ஒன்றுப்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமாகும் என்று அவர் சொன்னார்
அதே வேளையில் இந்திய கூட்டுறவுக் கழகங்கள் சந்தித்து வரும் சவால்களை கண்டறிவதுடன், எதிர்கால இலக்கங்களை திட்டமிடும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்திய கூட்டுறவுக் கழகங்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து கூட்டுறவுக் கழங்களும் தலா 30,000 ரிங்கிட் மானியத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.