
ஈப்போ, அக்.13-
இம்மாதம் 19 ல் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பும், கலை நிகழ்ச்சியும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய சட்டத்துறை துணை அமைச்சருமான மு.குலசேகரன் ஏற்பாட்டில் புந்தோங்கிலுள்ள ஐ.ஆர்.சி கிளப்பின் திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி டாக்டர் எம். இந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வு மாலை 5.00 மணிக்கு தொடங்கி இரவு மணி 10.00 க்கு முற்றுப்பெறும். இம்முறை இந்நிகழ்வில் தமிழ் நாட்டின் சினிமாத்துறையில் பிரசித்து பெற்ற இயக்குநர் பாரதிராஜா சிறப்பு பிரமுகராக கலந்துக்கொள்ளவுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, இந்நிகழ்வில் இந்திய கலை கலாச்சார பண்பாட்டு படைப்புகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், இம்முறை பல இனத்தை சேர்ந்ந 2000 பேருக்கு பி40 குடும்பத்தினருக்கு உணவுப்பொருட்களும், பணமுடிப்பும் வழங்கும் நிகழ்வும் நடைபெறும். அதோடு, வருகையாளர்கள் அனைவருக்கு இரவு உணவு விருந்து சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் பொதுமக்கள் கலந்துக்கொள்ளும்படி அன்போடு அழைக்கிறார் மலேசிய சட்டத்துறை துணை அமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரன்.