கோலாலம்பூர் அக் 14-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் 15 ஆவது தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த தீபாவளி விழாவை லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கம் தொடர்ந்து நடத்துவது பெருமைக்குரியது.
இந்திய சமூகத்தின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான சில தொடர் முயற்சிகளை நான் இந்த விழாவில் பகிர்ந்து கொண்டேன்.
மேலும் நமது பன்முக கலாச்சார சமுதாயத்தில் தோழமை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தவும் கொண்டாடவும் அனைவரையும் வலியுறுத்தினேன் என்று அவர் சொன்னார்.
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் இஸ்மாயில் மற்றும் செயலாளர் இராஜன் ஆகியோர் தலைமையிலான செயலவை உறுப்பினர்கள் இந்த விழாவை சிறப்பாக நடத்தினர்.