


கோலாலம்பூர் அக் 15-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜாலான் செந்தூல் மானீஸ் ம இகா கிளைத் தலைவர் மற்றும் Persatuan Kebajikan Kekasih இயக்கத்தின் தலைவர் டாக்டர் முனியப்பா வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வசதி குறைந்த மக்களுக்கு தன்னலம் கருதாமல் டாக்டர் முனியப்பா உதவி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் இறுதியில் ம இகா நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்
உணவுக் கூடைகளை பெற்றுக் கொண்டனர்.
ம இகா தேசிய தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ சைமன் ராஜா, பத்து டிவிஷன் தலைவர் பாலகுமாரன் ஆகியோர் வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகளை எடுத்து வழங்கினர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர், மகிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் மற்றும் ம இகா தேசிய பொருளாளர் டத்தோ கண்ணா சிவகுமார் வழிகாட்டுதல் பேரில் தொடர்ந்து ஏழை மக்களுக்கு உதவி வருவதாக டாக்டர் முனியப்பா பெருமையுடன் தெரிவித்தார்.
எனது வழிகாட்டியே டத்தோ கண்ணா சிவகுமார் தான். இன்று நான் இந்த அளவுக்கு ஏழைகளுக்கு உதவுவதற்கு அவர் காட்டிய பாதைகள் தான்.
பெருநாள் காலங்களில் வசதி குறைந்த மக்களும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
நான் கொடுத்த உணவு கூடைகள் உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும்.
அந்த வகையில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வேன் என்று அவர் சொன்னார்.