காளிதாஸ் சுப்ரமணியம்
டயான்சாரா, அக் 16-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேங்க் ரக்யாட் அறவாரியத்துடன் இணைந்து சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி சேவை மையம் 10,3000 பேருக்கு உணவு கூடைகளை வழங்குகிறது என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
நாடு தழுவிய அளவில் வசதி குறைந்த மக்களுக்கு இந்த உணவு கூடைகள் வழங்கப்படுகிறது.
நேற்று முதல் கட்டமாக சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 500 பேருக்கு உணவு கூடைகளை அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.