கோலாலம்பூர் அக் 17-
அமரர் முருகு சுப்பிரமணியன் குடும்பத்தினரும்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும்
இணைந்து நடத்தும்
முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை 20 அக்டோபர் 2024-ஆம் நாள் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோலாலம்பூர் செந்தூல், ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திலுள்ள செட்டியார்கள் மண்டபத்தில் கொண்டாடவிருக்கின்றனர்.
தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் முருகு அவர்களின் சேவைகளும் பணிகளும் நினைவு கூர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்ற நன்னோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுவார்.
முருகுவுடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரைப் பற்றிய நினைவுகளை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.
முருகுவின் வாழ்க்கைப் பயணம், மலேசிய இந்திய சமூக மேம்பாட்டுக்கு அன்னாரின் பங்களிப்பு, முருகுவின் எழுத்தோவியங்கள் கொண்ட கண்காட்சி, ஆகிய அம்சங்கள் ‘முருகு நூற்றாண்டு விழா’ நிகழ்ச்சியில் மையமாக இடம் பெறும்.
முருகு அவர்களுக்கான நிரந்தர இணையத் தளம் ஒன்றும் இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களால் தொடங்கப்படவிருக்கிறது.
ஊடகத் துறைக்கும், தமிழ் மொழிக்கும், மலேசிய இந்திய சமூகத்திற்கும் அளப்பரிய பணிகள் ஆற்றி மறைந்த முருகு என்ற மாமனிதரின் நினைவுகளைக் கொண்டாட, மேற்குறிப்பிட்ட நாளில் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களுடன் இணைய, அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொள்வதை கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையில் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*மேலே உள்ள அழைப்பிதழில் உள்ள QR code மூலம் பதிவு செய்யலாம்;
*கீழ்க்காணும் கூகுள் இணைப்பு பாரத்தின் மூலம் பதிவு செய்யலாம்;
https://forms.gle/9maoggLBH5sgMQxr5
*அல்லது 012-2092601 என்ற எண்ணில் வாட்ஸ்எப் மூலம் அழைக்கலாம்.