கோலாலம்பூர் அக் 18-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு என்ற 734 ஆவது திருக்குறளை ஒப்புவித்தார்.
நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும் என்று திருக்குறளை சுட்டிக் காட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார்.