லண்டன்: அக் 20-
யாஹ்யா சின்வார் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதலால் ஹமாஸ் தலைவர்கள் பீதியான நிலையில், தங்களது புதிய தலைவரை அறிவிப்பதில் தயங்கி வருகின்றனர்.
கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காசா பகுதி முழுவதும் அழிக்கப்பட்டது.
ஹமாஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். அவர்கள் எவ்வளவு ஆழமான சுரங்கப்பாதையில் இருந்தாலும், இஸ்ரேலின் கூர்மையான பார்வை மற்றும் கொடிய தாக்குதலுக்கு அவர்களால் தப்ப முடியவில்லை.
சமீபத்தில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். அதனால் ஹமாசின் முதுகு உடைந்துவிட்டது என்றே கூறலாம்.
தற்போது ஹமாசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. .
இருந்தாலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற மற்றொரு கோணத்தில், இஸ்ரேலுடன் முழு பலத்துடன் போரை தொடுக்கலாம் என்றும் கூறுகின்றனர்.