ஈப்போ அக் 22-
பேராவில் மிகவும் பிரசித்திப் பெற்ற நாட்டிய பள்ளிகளில் ஒன்றாக திகழும் நிர்த்திய ஜோதி நாட்டியப பள்ளியைச் சேர்ந்த 40 மாணவர்கள் இரண்டு மணி நேரம் இடை விடாது ஸ்கந்த லீலை நாட்டிய நாடகத்தை படைத்து பலரின் கவனத்தை ஈர்த்தனர் .
பேரா மாநில இந்து சங்கத்தின் நடவடிக்கைக்கு நிதி திரட்டும பொருட்டு இந்த மாபெரும் நிகழ்வு ஈபோவில் உள்ள கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
முருகப் பெருமானின் திருவிளையாடலை சித்தரிக்கும் பொருட்டு நாட்டிய நாடக வடிவில் தயாரிக்கப்பட்டு படைக்கப்பட்டது என் பது குறிப்பிடத்தக்து.
பேரா கம்பாலைச் சேர்ந்த இந்த நாட்டியப பள்ளியின் ஆசிரியையான இரத்தன உமா மனோகரன் நாட்டித் துறையில் சிறந்த வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே.
மலேசிய சுவர்ணமுகி , நாட்டிய பேரொளி உட்பட பல விருதுகளைப பெற்ற இவர் இதற்கு முன்பு பல நாட்டிய படைப்புகளை படைத்துள்ளார்.
பேரா மாநில இந்து சங்கத்தின் சமய நடவடிக்கை ஆதரவு வழங்கும் பொருட்டு இந்த நாட்டிய நாடகத்தை படைத்ததாகவும் 40 மாணவிகள் பங்கேற்ற அந்த நாட்டிய நாடகத்தை படைக்க கடந்த ஒரு மாத காலம் பயிற்ச்சியை வழங்கியதாக இரத்த உமா மனோகரன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த பிரமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நாடாளுமன்ற தொகுதியான தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்புச் செயலாளர் சுரேஷ்குமார் ராமச்சந்திரன் நிகழ்வை தொடக்கி வைத்ததுடன் மாநில இந்து சங்க நடவடிக்கைக்கு நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் செய்தார்.
முன்னதாக பேசிய மாநில இந்து சங்கத் தலைவர் சுந்திரசேகரன் பெருமாள், பேரா மாநில இந்து சங்கம் ஈப்போவில் உள்ள பிரதான இடத்தில் சொந்த கட்டடத்தை வைத்துள்ளதாகவும் அது முறையே இயங்கி வருகிறது அதன் நடவடிக்கைக்கு நிதி தேவையை கருத்தில் கொண்டு நிதி திரட்ட அதிர்ஷக் குலுக்கள் நடத்தப்பட்டது.
அதற்காக இந்த நாட்டிய நாடக படைப்பு நடத்தபட்டதாகவும். இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் கலத்துக் கொண்ட பிரமுகர்களுக்கும் சமய நிகழ்விற்கு ஆதரவு வழங்கியவர்களுக்கும் கௌரவிக்கப்பட்டனர்
நிகழ்வில் நாட்டிய படைப்புகளை படைத்த மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கபட்டது.