ஷா ஆலம், அக் 23- கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில்,கணவர் இறப்பால்
துன்பப்படும் பெண் ஒருவர் பற்றி சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி
மஸ்வான் ஜோஹாருக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு இரங்கல் தெரிவித்ததோடு
மூன்று குழந்தைகளுக்கு தாயான சாராவுக்கு ரிம1,000.00 நன்கொடையை அவர்
வழங்கினார்.
தந்தை இல்லாமல் பள்ளியில் படிக்கும் தனது 3 குழந்தைகளை தனியாக ஆதரிக்க
இந்த நன்கொடை உதவியாக இருக்கும் என சாரா தெரிவித்தார்.
ஆகவே, இந்த
நன்கொடை கிடைக்க உதவிய அனைவருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்தார்.