விழுப்புரம்: அக் 28-
தமிழக வெற்றி கழகம் இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது என அக்கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நடைபெற்றது.
கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.
கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் அறிவித்து பேசியதாவது:
`பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது எங்களின் கோட்பாடாகும்.
தமிழக மக்களின் தனிமனித, சமூக, பொருளாதாரத்தை உருவாக்குவது நம் குறிக்கோளாகும்.
ஜனநாயகம் ஒரு நாட்டின் மக்களை சாதி, மதம் என பாகுபடுத்தாமல் அவர்களின் உரிமைகளை நிலை நாட்டுவதாகும்.
விகிதாச்சார பங்கீடு அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். பாலின சமத்துவம், மதச்சார்பின்மை, மாநில தன்னாட்சியே அம்மாநில மக்களின் உரிமையை மீட்பதே நம் கொள்கை.
தவெக இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது. தமிழ்வழி கல்வியில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
எங்கும் அரசியல் தலையீடு அற்ற நிலையை உருவாக்குவோம். சுற்றுசூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது. திண்டாமை ஒழிப்பு, போதை இல்லா தமிழகம், இதுவே நம் கொள்கையாகும் என்று அவர் கூறினார்