


ரவி முனியாண்டி
காஜாங், அக் 28-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஜாங் சமூக நல இயக்கங்களின் ஏற்பாட்டில் காஜாங் அரங்கில் தீபாவளி இன்னிசை விழா விமரிசையாக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா சிறப்பு வருகை புரிந்தார்.
சைக்கோ மந்திரா கலைஞர்களின் ஆடல் பாடல் இன்னிசையுடன் நடைபெற்ற இந்த விழாவில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டன.
பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிசான் மற்றும் காஜாங் கவுன்சிலர் பாலமுரளி கோவிந்தராஜ், மைபிபிபி கட்சியின் தேசிய தகவல் பிரிவு துணை தலைவரும் காஜாங் சமூக நல இயக்கங்களின் தலைவருமான குமார், காஜாங் மருத்துவமனை வருகையாளர் வாரிய உறுப்பினர் தேவேந்திரன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காசே இக்லாஸ் இயக்கத்தின் தலைவருமான டாக்டர் சுரேந்திரன் பேசுகையில் இந்த இன்னிசை விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் இங்கு அமைக்கப்பட்ட தீபாவளி சந்தை கடைகளுக்கு சென்று தங்கள் குடும்பத்துக்கு தேவையான புத்தாடைகளை வாங்கிக் மகிழ்ந்தனர் என்று குறிப்பிட்டார்.
மேலும் ஏராளமான மக்கள் இந்த தீபாவளி இன்னிசை விழாவுக்கு வந்திருந்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.