தீபாவளி பண்டிகை முன்னிட்டு வசதி குறைந்த 50 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கி பேருதவி புரிந்தது Persatuan Kebajikan dan Bimbingan PRD இயக்கம்!

கோலாலம்பூர் அக் 29-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கஷ்டப்படும் வசதி குறைந்த மக்களை தேடிச் சென்று Persatuan Kebajikan dan Bimbingan PRD இயக்கம் உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்துள்ளது.

கஷ்டப்படும் மக்களுக்கு தக்க தருணத்தில் உதவிகளை வழங்கி வரும் Persatuan Kebajikan dan Bimbingan PRD இயக்கம் ஒவ்வொரு சனிக்கிழமையும் தலைநகரில் அங்கங்கே தங்கி இருக்கும் வீடோற்றவர்களின் பசியும் போக்கி வருகிறது.

அந்த வகையில் இப்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்தாப்பாக், சுங்கை பீசி, ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் செமினி ஆகிய வட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கியுள்ளது.

Persatuan Kebajikan dan Bimbingan PRD இயக்கத்தின் தலைவர் சுரேஸ் வீரசிங்கம் அவர்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொண்ட மக்கள் நன்றியை பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைய Etika Sdn Bhd
மற்றும் Ardent Spices & Seasoning நிறுவனம் உதவி புரிந்தது.

மேலும் இயக்கத்தின் தலைவர் சுரேஷுக்கு Vijayan மற்றும் Jacob பெரும் துணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles