
செமினி, அக்.28-
தீபாவளியை முன்னிட்டு செமினி வட்டாரத்தில் 44 கடைகள் 10 நாட்களுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளன.
இங்கு பூ, மாலை, பலகாரங்கள், பிஸ்கட்கள் என தீபாவளி சம்பந்தப்பட்ட பல்வேறு வகையான பொருட்களை சிறுதொழில் செய்பவர்கள் விற்று வருகின்றனர்.
இந்த 44 கடைகளில் செமினி நகரத்தில் மட்டும் 29 கடைகள் இருக்கும் வேளையில், செமினி முழுவதும் 44 கடைகள் இருக்கின்றன என்று காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் சந்திரன் ராமசாமி, ராமச்சந்திரன் அர்ச்சுனன் ஆகியோர் தெரிவித்தனர்.
காஜாங் நகராண்மைக் கழகத்திற்கான லைசென்ஸ் வழங்கும் இயக்குநர் இஸுடின் முகமட் ரம்லி, பிகேஆர் உலு லங்காட் தொகுதித் தலைவரும் தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணனின் சிறப்பு அதிகாரியுமான ராஜன் முனுசாமி மற்றும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களும் நேற்று முன்தினம் ஒவ்வொரு கடையாகச் சென்று வணிகர்களுக்கு லைசென்ஸ் வழங்கினார்.
இந்நிகழ்வை காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் சந்திரன் ராமசாமி, ராமச்சந்திரன் அர்ச்சுனன் உட்பட இன்னும் சிலர் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
இங்கு இந்த லைசென்ஸ்களை வாங்கிக் கொடுப்பதற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட சரண், இங்குள்ள கடைகளுக்கான எண்ணிக்கை விவரங்களை ராஜன் முனுசாமி, சந்திரன் ராமசாமி, ராமச்சந்திரன் அர்ச்சுனன் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
இந்த வேளையில் தீபாவளிக்கான கடைகளைப் பெற்றுத் தந்த காஜாங் நகராண்மைக் கழகம் உட்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனைத்து வணிகர்களின் சார்பில் தாம் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக சரண் குறிப்பிட்டார்.