பாங்கி, அக் 31-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல அரசியல் பிரமுகர் டத்தோ வி.கே.கே. தியாகராஜனின் புதல்வர் வி கே.கே.ராஜசேகரன் பாங்கி வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்.
பாங்கி ரூக்குன் தெத்தாங்காவின் தலைவர் மகேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டது.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட ராஜசேகரன் தாம் இனி வரும் காலங்களில் பாங்கி வட்டார மக்களுக்கு உதவிகள் தொடரும் என்று அறிவித்தார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் சமூக சேவகி டாக்டர் தமிழ்ச் செல்வி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.