தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா இருவரும் மலேசிய வாழ் அனைத்து இந்து பெருமக்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வாழ்விலும் ஒளி பிரகாசமாய் இருக்க செய்வதுடன் அனைவரின் மனங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டார்
உங்களின் அன்புக்குரியவர்களுடன் இந்த தீபத்திருநாளை மகிழ்ச்சியுடன் குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடுங்கள் என்று மாமன்னர் தம்பதியர் முகநூல் பதிவின் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்து பெருமக்கள் யாவரும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள்