கோலாலம்பூர் நவ 1-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கம்போங் பண்டானைச் சேர்ந்த சமூக சேவையாளர், தித்தி வங்சா தொகுதி காங்கிரஸ் துணைச் செயலாளர் ராஜா காளிமுத்து – ஜூலியானா ராஜா தம்பதியரின் இல்ல தீபாவளி விருந்து உபசரிப்பில் தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினரும் தோட்டத் தொழில் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி கலந்து சிறப்பித்தார்.
டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனிக்கு தமிழர் பாரம்பரியம் படி மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.
பின்னர் குத்து விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தார்.
அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி மற்றும் தித்தி வங்சா அம்னோ டிவிஷன் துணை தலைவர் டத்தோ அஸிசூல் ஆகியோருக்கு ராஜா காளிமுத்து பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மகிழ்ந்தார்.
பின்னர் அவருக்கு சுவையான உணவும் பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து எட்டாம் ஆண்டாக ராஜா காளிமுத்து தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி கலந்து கொள்கிறார்.