ஷா ஆலம், நவ 1: கடந்த 2021 டிசம்பரில் ஸ்ரீ மூடாவை தாக்கிய பெரும் வெள்ளத்தின் போது மீட்கப்பட்ட குழந்தைகளை சந்திக்க சிலாங்கூர் மாநில முதலமைச்சர் நேரம் ஒதுக்கினார்.
தனது மனைவி டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முஹம்மதுடன் வந்த டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வி பாப்பாய்டு வரவேற்றார்.
மேலும் இப்போது மூன்று வயதாகும் எம் கியாஷ்குமாரை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்தார்.
இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த டத்தோஸ்ரீ அமிருடின், தாமான் ஸ்ரீ முடா வெள்ளத்தில் சிக்கித் தவித்த அன்று 55 நாள் குழந்தையான கியாஷ்குமாருக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் சேர்ந்து மீட்க உதவியதாக கூறினார்.
இன்று, தீபாவளி கொண்டாட்டத்தில் மக்கள் வீடுகளுக்கு வருகை மேற்கொண்ட அவர், வெள்ளத்தின் போது நாங்கள் மீட்ட குழந்தையை சந்திக்க வந்ததாக கூறினார்”.
“இந்த குழந்தையை மீண்டும் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த மாநில அரசு இன பாகுபாடின்றி அனைத்து குடிமக்களின் நலனுக்காக அக்கறை கொண்டுள்ளது என்பதற்கான சான்றாகும்”. என்று அவர் சந்தித்தபோது கூறினார்.
2021 டிசம்பரில் சிலாங்கூரைத் தாக்கிய பெரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேலும் பலரை தனது தலைமை ஆழ்ந்த கவலையுடன் கவனிப்பதாக அமிருடின் மேலும் கூறினார்.
இதற்கிடையில், குழந்தையின் தாயார், வி ஷப்பிரிதா, 32, ஒரு மந்திரி புசாரின் செயல் தனது மனதை மிகவும் தொட்டதாகவும், 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது தனக்கு உதவிய மந்திரி புசாரின் நேரடி வருகையை தான் எதிர்பார்க்க வில்லை என்றும் கூறினார்.