பினாங்கு, நவ 2 –
பட்டாசு மற்றும் வான வெடிகளை வெடிப்பதில் தீபாவளியை கொண்டாடியவர்கள் தாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்துள்ளார்கள்.
தீபாவளி முடிந்த பின்னரும் இன்று வரை விடியர்காலையிலும்நள்ளிரவிலும் பட்டாசுகளின் சத்தம் பல மீட்டர்களுக்கு அப்பால் கேட்க முடிவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
ஒளியை விட ஒலிதான் அதிகமாக இருந்தது.
பட்டாசு வெடிப்பதை இனியும் தொடராமல் இயற்கை காற்றை சுவாசிப்போம் என்றார் அவர்.
இதன் காரணமாக மூன்று நாள் கடந்தும் இன்னும் பலர் இந்த வெடிகளை வெடித்து காற்றை மாசு படுத்தி வருவதாக சுப்பாராவ் தெரிவித்தார்.
இரு சிலர் 2,000 வெள்ளிக்கு பெருமானமுள்ள வெடிகளை வாங்கியிருப்பதாக கடைக்காரர்கள் தங்களிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
உங்கள் கைவசம் இருக்கும் இந்த வெடிகளை இனியும் வெடிக்க வேண்டாம் என சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.
இந்த வெடிகளின் சத்தத்தை கேட்டு பறவைகள், அணில்கள், நமது செல்லப் பிராணிகளான பூனை,நாய்கள் இன்னும் வீடு திரும்பாமல் பயத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கின்றன.
அவற்றிற்காக இனியும் வெடிகளை வெடிக்க வேண்டாம்.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் கருவில் உள்ள சிசுவுக்கு ஆகாது.
எனவே, கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளில் இருந்து, விலகி இருப்பது நல்லது.
அதிக ஓசை காரணமாகக் காது கேளாமை, தூக்கமின்மை, உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
காதுகளைப் பாதுகாத்துக் கொள்ள 85 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதய நோயாளிகள் அதிக ஓசையைக் கேட்பதால் பாதிப்புக்கு ஆளாகலாம்.
நம்முடைய ஒரு நாள் மகிழ்ச்சிக்காக இப்படி வாயில்லா ஜீவன்களை வதைக்க வேண்டுமா என்று அவர் கேள்வியை எழுப்பியுள்ளார்